பொன்மொழிகள் 12
நீ இவ்வுலகில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாது என்று இருவகைப்பட்ட மனிதர்கள் கூறுவர்:
அவர்களில் ஒரு வகையினர் தாங்கள் முயற்சி எடுக்க அஞ்சுபவர்கள், மற்றொரு வகையினர் உனது
வெற்றியை நினைத்து அஞ்சுபவர்கள்.
ரே கோஃபோர்த்
ஒருவன் இவ்வுலகிலிருந்து எவ்வளவு எடுத்துக் கொண்டானோ, அதற்கு ஈடானதையாவது இவ்வுலகிற்கு திருப்பித் தர வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது!
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
நோக்கு(Attitude) என்ற சிறிய விஷயம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பெறுவதை வைத்து நாம் வாழ்கிறோம். கொடுப்பதை வைத்து ஒருவரின் வாழ்வை நிர்ணயிக்கிறோம்.
எல்லா உன்னதமான விஷயங்களும் எளிமையானவை, ஒரு வார்த்தையில் சொல்லக்கூடியவை: விடுதலை, நேர்மை, நியாயம், கடமை, கருணை, நம்பிக்கை ...
வின்ஸ்டன் சர்ச்சில்
நீ இவ்வுலகில் பார்க்க விரும்பும் மாற்றம் நீயாக இருத்தல் வேண்டும்!
உன்னுடைய நம்பிக்கைகள் எண்ணங்களாகின்றன. உன்னுடைய எண்ணங்கள் வார்த்தைகளாகின்றன. வார்த்தைகள் செயல்கள் ஆகின்றன. செயல்கள் வழக்கங்கள் ஆகின்றன. வழக்கங்கள் மதிப்பீடுகள் ஆகின்றன. மதிப்பீடுகள் உனது விதியை நிர்ணயிக்கின்றன.
மனதளவில் வன்முறை இருக்கும்போது, வன்முறையாளனாக இருப்பது என்பது, பேடித்தனத்தை அகிம்சை என்ற போர்வையால் மூடி மறைப்பதை விட சிறந்தது!
மகாத்மா காந்தி
எது சரி எது தவறு என்பதை ஒருவர் சுயமாக முடிவு செய்ய வேண்டும். அது போலவே, எது நாட்டுப்பற்று, எது இல்லை என்பதையும் தான். உன்னுடைய ஆழமான நம்பிக்கைக்கு எதிராக முடிவெடுப்பது என்பது, உனது சுயத்திற்கும் உன் நாட்டுக்கும் செய்யும் பெரும் துரோகமாகும், பிறர் உன் மேல் எவ்வித முத்திரையை குத்தினாலும் கூட!
மார்க் ட்வைன்
நான் ஏதன்ஸ் நகரவாசியும் அல்லன், கிரேக்கனும் அல்லன், நான் இவ்வுலகத்தின் குடிமகன்!
சாக்ரடீஸ்
எந்தவொரு கணத்தில், மனித உரு என்ற கோயிலில் கடவுள் அமர்ந்திருப்பதை உணர்கிறேனோ
எந்தவொரு கணத்தில், ஒவ்வொரு மனிதனுள்ளும் கடவுளைக் காண முடிகிறதோ
அந்தவொரு கணத்தில், எனது பற்றுக்கள் அனைத்தையும் துறந்து நான் விடுதலை பெறுகிறேன்!
மதம் என்பது, மனிதன் உள்ளிருக்கும் இறைத்தன்மையின் வெளிப்பாடே !
சுவாமி விவேகானந்தர்
6 மறுமொழிகள்:
Test !
மிக நல்ல வார்த்தைகள். தொகுத்து இட்டமைக்கு நன்றி.
என்ன திடிரென்று?!!
:-))
யாராவது சொன்னா கேட்கமாட்டேன் என்கிறார்களா?
வணக்கம் பாலா அவர்களே
சர்ச்சில் சொன்னது நல்லா இருக்கு ஆனால் நடப்பது...'இவ்வுலகில் ஒவ்வொருவரும் தன்னை விட்டு விட்டு அடுத்தவரைத்தான் திருத்த முயற்சிக்கிறார்கள்'
அதான் இப்ப ஒரு ஒரு குடும்பத்திலும் நடந்துகொண்டு இருக்கிறது. எல்லோரும் அவர்கள் ஈகொவுக்காக வாழ்கிறார்கள் அவர் நினைப்பதை அடுத்தவர் மேல் திணிக்கிறார்கள். முன்பு போல் இல்லாமல் இப்போது பொருளாதார சுதந்திரம் இருப்பதால் ஒவ்வொருவரும் அவரே சரி என்று அடுத்தவரை திருத்த முயல்கின்றனர், குடும்பங்கள் சுலபமாய் சிதறுகின்றன
சரவணன
சரவணன் அவர்களுக்கு,
உங்கள் கருத்து உண்மைதான். ஆனாலும் அடுத்தவரை திருத்த? முயலும்போது அல்லது அறிவுரை அருளும்போது, அது தன் மீதும் திரும்ப பாய வாய்ப்பு, குறிப்பாக குடும்ப அல்லது நெருங்கிய சொந்தம்/நண்பர் வட்டத்தில் (நீ ரொம்ப ஒழுங்கோ? எனக்கு சொல்ல வந்துட்ட, உன்னை திருத்திக்கோ முதல்ல..........) இருப்பதை எண்ணி, சண நேரமேனும் உளறியபடி நடந்து கொள்ள முயலுகிறர்களே, அந்த வரை பலன் உண்டே.
சுல்தான், குமார், சரவணன், விஜய்,
வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
//யாராவது சொன்னா கேட்கமாட்டேன் என்கிறார்களா?
//
:)))
எ.அ.பாலா
Post a Comment